Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

233
0

மேஷம் – இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். நிதிநிலை உயரும். நேர்முகத் தேர்வில் நினைத்த படி வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்துசேரும்.

ரிஷபம் – திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அயல் நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.

மிதுனம் – குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப் பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியா மல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சொத்துக்களால் பிரச்சினை உண்டு.

கடகம் – வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வரவை விட செலவு கூடும். பயணத்தை மாற்றியமைப்பீ£கள். நட்புபகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சிம்மம் – எதிர்பார்ப்புகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடிசுபச் செய்திகள் வந்துசேரும். தொழிலை விரிவு செய்ய புதிய நபர்களைச் சந்திக்க முற்படுவீர்கள். தேக நலன் சீராகும்.

கன்னி – கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும்.

துலாம் – பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டம் நிறைவேறும் நாள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வரலாம்.

விருச்சிகம் – முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும் நாள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

தனுசு – திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தில் ஏற்பட்டகருத்து வேறு பாடுகள் அகலும். குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மகரம் – குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீடுமாற்றம், இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்யோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

கும்பம் – அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடி யெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத் துதவும். எதிர்பாராத பயணமொன்றால் வழக்க மான பணிகளை மாற்றியமைப்பீர்கள்.

மீனம் – மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். கடினமான வேலைகளைக் கூட கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழியில் வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

Advertisements

Leave a Reply