Home ஜோதிடம் ராசிபலன்

ராசிபலன்

233
0

மேஷம் – யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல் பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கரை தேவை. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் – நேச மனப்பான்மை கொண்டவர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். கடன் தொல்லைகள் குறையும்.

மிதுனம் – நன்மைகள் நடைபெறும் நாள். உத்யோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.

கடகம் – தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனைகள் படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உறவினர் பகை மாறும். உடன் பிறபுக்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம் – அலைபேசி வழியில் அனுகூலான தகவல் வந்து சேரும் நாள். புதிய மனை கட்டிக்குடி யேறும் எண்ணம் மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவுவர். திருமண முயற்சி வெற்றி தரும்.
கன்னி – செல்வநிலை உயரும் நாள். தேசப்பற்றுமிக்கவர்களின் பாசப்பிணைப்பு ஏற்படும்.சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். தாய்வழி உறவினர்களால் தனலாபம் கிட்டும்.

துலாம் – கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சினை களை தீர்க்க பிரபலமானவர்கள் யோசனை கூறுவர். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் – பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பக்குவ மாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி கூடும்.

தனுசு – ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோயில் திருப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். செலவிற்கேற்ற வரவு உண்டு.

மகரம் – சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாள். திட்ட மிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்ப பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்யோக நலன்கருதி ஊர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கும்பம் – வசதிகள் பெருகும் நாள். வளர்ச்சிப் பாதையைநோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உறவினர்பகை அகலும்.

மீனம் – எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். தந்தைவழி அனுகூலம் உண்டு. தொலை பேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும்.

Advertisements

Leave a Reply