Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

275
0

மேஷம் – காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளை களின் விருப்பங்களை நிறை வேற்றுவதற்கு கையிருப்பைக் கரைக்க நேரிடும்.
ரிஷபம் – தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.
மிதுனம் – பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சி னைகள் தீரும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
கடகம் – வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வளர்ச்சி கூடும். வருமானப் பற்றாக்குறை அகல புதிய வழிபிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். சுபச் செய்திகள் வந்து சேரும்.
சிம்மம் – நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கும் நாள். நேச மனப்பான்மை கொண்ட வர்களின் உதவி கிடைக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
கன்னி – உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலைமாறும்.
துலாம் – திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் வரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டு.
விருச்சிகம் – வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாள்.வெளியூர்ப் பயணங்களால் விருப்பங்கள் நிறைவேறும். வருங்கால நலன்கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு – துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம் – மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
கும்பம் – பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாராட்டும், புகழும் கூடும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வியாபார விருத்தி உண்டு.
மீனம் – தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

Advertisements

Leave a Reply