Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 26-09-2019

இன்றைய ராசிபலன் – 26-09-2019

160
0

மேஷம்
நல்ல செய்திகள் உங்களை நோக்கி வரும். சிக்கலான சில நடைமுறைகளை தவிர்த்து நடைபோட முயற்சிப்பீர்கள். ஆனால், அது அவப்பெயரையே ஏற்படுத்தும். குடும்பத்தினரின் அதரவு வழக்கம் போல் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

ரிஷபம்
எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிப்பீர்கள். ஆனால், தடைகளை கடந்து செல்ல திணறுவீர்கள். நம்பிக்கையின்மையே இதற்கு காரணம். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. கைகளில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மிதுனம்
குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும்.

கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள்.

சிம்மம்
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

கன்னி
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

துலாம்
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்
உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.

தனுசு
குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.

மகரம்
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.

கும்பம்
குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

மீனம்
சரிவை நோக்கிச் சென்ற பாதை மேலேற தொடங்கியிருக்கிறது. ஆனால், அங்கும் முள் இருக்கும் என்பதை மறக்க வேண்டும். அடியை கவனமாக எடுத்து வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கு யாரையும் நீங்கள் குறை சொல்ல முடியாது.

Advertisements

Leave a Reply