Home ஜோதிடம் ஆவணி மாத நட்சத்திர பலன்கள் – 27.08.2019 முதல் 02.09.2019 வரை

ஆவணி மாத நட்சத்திர பலன்கள் – 27.08.2019 முதல் 02.09.2019 வரை

419
0

 அஸ்வினி: உங்கள் நட்சத்திர நாயகன் கேது, பூராடம் நட்சத்திரத்தில் உள்ளார். அனுபவம் இல்லாதவரின் ஆலோசனைகளால் வியாபார நஷ்டம் ஏற்படலாம். அனுபவ அறிவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

 பரணி: உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன், மகம் காலில் நிற் கிறார். ஒரு சிலருக்கு திருமண பாக்கியம் கைகூடும். மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங் களில் புது அனுபவம் பிறக்கும்.

 கார்த்திகை: உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன், மகம் நட்சத்திரத்தில் உள்ளார். உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பதவிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள்.

 ரோகிணி: உங்கள் நட்சத்திர நாயகன் சந்திரன், புனர்பூசம் காலில் நிற்கிறார். வி.ஐ.பி.க்களின் உதவியால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் அமையும். கணவன் -மனைவி உறவில் ஒற்றுமை வளரும்.

 மிருகசீரிஷம்: உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய், கேது காலில் நிற்கிறார். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகள் வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். நீர் பற்றாக்குறை அகலும்.

 திருவாதிரை: உங்கள் நட்சத்திர நாயகன் ராகு, சனிக்கு ஏழில் உள்ளார். தடைபட்டு வந்த திரு மணம் கைகூடும். உத்தியோகஸ்தர்கள், புதிய அதிகாரிகளால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

 புனர்பூசம்: உங்கள் நட்சத்திர நாயகன் குரு, கேட்டை காலில் உள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் உயரும். கடன் பிரச்சினை தீரும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என இல்லம் களைகட்டும்.

 பூசம்: உங்கள் நட்சத்திர நாயகன் சனி, பூராடம் காலில் நிற் கிறார். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.

 ஆயில்யம்: உங்கள் நட்சத்திர நாயகன் புதன், குருவிற்கு பத்தில் இருக்கிறார். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்த சொந்தங்கள் சேரும்.

 மகம்: உங்கள் நட்சத்திர நாயகன் கேது, சனியுடன் கூடியிருக் கிறார். வழக்குகள் சாதகமாகும். உறவினர்களுடன் நட்புறவு மேலிடும். பணபலம், படைபலம் கூடும். எதிலும் வெற்றிமுகம் உண்டாகும்.

 பூரம்: உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன், செவ்வாய், புதன், சூரியனுடன் உள்ளார். கலைத்துறையினருக்கு வருமானம் உயர வழிபிறக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிரால் லாபம் அடைவீர்கள்.

 உத்திரம்: உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன், குருவிற்கு ராஜ்ஜிய ஸ்தானத்தில் நிற்கிறார். யாருக்காகவும் பண விஷயத்தில் பொறுப்பேற்காதீர்கள். கணவன்-மனைவி உறவில் களிப்புறவு கூடும்.

 ஹஸ்தம்: உங்கள் நட்சத்திர நாயகன் சந்திரன், குருவிற்கு எட்டாமிடத்தில் உள்ளார். சுப நிகழ்ச்சி களால் வீடு களை கட்டும். வெகு நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.

 சித்திரை: உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய், சந்திரனுக்கு மூன்றில் இருக்கிறார். பெண்களுக்கு மனதில் நினைத்தபடி வரம் அமையும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

 சுவாதி: உங்கள் நட்சத்திர நாயகன் ராகு, சனி பகவானுக்கு சப்தமத்தில் நிற்கிறார். எதிர்பார்க்கும் பணம் வந்து பையை நிரப்பும். வழக்குகள் வெற்றியாகும். புதிய வியாபார ஸ்தாபனத்தை தொடங்குவீர்கள்.

 விசாகம்: உங்கள் நட்சத்திர நாயகன் குரு, சூரியனுக்கு நான்கில் உள்ளார். பணியாளர்களால் இடையூறுகள் வரலாம். நியாயவாதிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள்.

 அனுஷம்: உங்கள் நட்சத்திர நாயகன் சனி, செவ்வாய்க்கு ஐந்தில் உள்ளார். காரியங்களில் இருந்த தடை நீங்கும். குடும்ப வரு மானத்தை உயர்த்த புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

 கேட்டை: உங்கள் நட்சத்திர நாயகன் புதன், செவ்வாய், சூரியன், சுக்ரனுடன் கூடியிருக்கிறார். நிதிநிறுவன தொழில் செய்பவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பங்குச்சந்தை லாபம் ஈட்டித் தரும்.

 மூலம்: உங்கள் நட்சத்திர நாயகன் கேது, சூரியனுக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். திருமணம், சீமந்தம், காதுகுத்து என இல்லம் களை கட்டும். வரவேண்டிய பாக்கி வந்து சேரும். ஆன்மிகவாதிகளின் நட்பு கிட்டும்.

 பூராடம்: உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன், மகம் காலில் நிற்கிறார். இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையில் இருந்து ஒதுங்குங் கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் விரும்பியபடி அமையும்.

 உத்திராடம்: உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன், மகம் நட்சத்திரத்தில் உலாவுகிறார். எதிர்பார்க்கும் பணம் வந்து பையை நிரப்பும். வழக்கு களில் வெற்றி கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுங்கள்.

 திருவோணம்: உங்கள் நட்சத்திர நாயகன் சந்திரன், சுபமாக உலாவுகிறார். உயர் ரக ஆடை, ஆபரணங்களில் முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.

 அவிட்டம்: உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய், மகம் காலில் நிற்கிறார். புண்ணிய நதிகளில் நீராடுவதால் உடல், மன அழுக்குகள் நீங்கும். கைகளில் பணம் நடமாடும். செய் தொழில், வியாபாரத்தில் லாபம் வளரும்.

 சதயம்: உங்கள் நட்சத்திர நாயகன் ராகு, மிதுன ராசியில் வீற்றிருக்கிறார். உத்தியோகஸ்தர் களுக்கு பணிச் சுமை குறையும். மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கும். சம்பள பாக்கிகள் வந்து சேரும். தேகபலம் கூடும்.

 பூரட்டாதி: உங்கள் நட்சத்திர நாயகன் குரு பகவான், புதன் காலில் இருக்கிறார். வியாபாரிகள் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நலம் தரும். கொடுக்கல் – வாங்கல் சுமுக மாகும். ஆபரண சேர்க்கை உண்டு.

 உத்திரட்டாதி: உங்கள் நட்சத்திர நாயகன் சனி, சுக்ரனின் காலில் நிற்கிறார். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடந்தேறும், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.

 ரேவதி: உங்கள் நட்சத்திர நாயகன் புதன், மகம் நட்சத்திர காலில் உலாவுகிறார். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகும். கலைஞர்களுக்கு பழைய பாக்கி வசூலாகும்.

Advertisements

Leave a Reply