Home உணவு தேன் வழங்கும் ஆரோக்கிய அற்புத நன்மைகள்

தேன் வழங்கும் ஆரோக்கிய அற்புத நன்மைகள்

195
0

தேனில் இருக்கும் இயற்கையான, தனித்துவமான இனிப்பு, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சரியான உணவு ஆகும்; உணவு மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால், உடலில் பல நன்மைகள் ஏற்படும்.தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

இதயத்திற்கு டானிக்
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு திறன்
நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் நமது உடலில் இல்லையென்றால் வீரியமில்லாத சிறு நோய்கள் கூட நமது உடலை பீடித்து மிக கடுமையான பாதிப்புகளை நமக்கு உண்டாக்க கூடும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் இருப்பது அவசியமாகும். தினமும் குழந்தைகளுக்கு தேன் சிறிதளவு கொடுத்து வருவது அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.
சரும நலம் நமது உடலை வெளிப்புற சூழல்களிருந்து காப்பது நமது தோல் ஆகும். ஒரு சிலருக்கு தட்ப வெப்ப சூழ்நிலைகளாலும், இன்ன பிற காரணங்களாலும் தோலில் சில இடங்களில் கரும்புள்ளிகள், தோல் உரிதல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படி பாதிப்பு கொண்ட இடங்களில் தேனை சிறிதளவு தடவி வந்தால் தோல் மீண்டும் பழைய தன்மையை பெறும்.

ஞாபக மறதி
தேனில் நமது ரத்தத்தில் இருக்கும் அணுக்களுக்கு புத்துணர்வை அளிக்கும் சக்தி நிறைந்துள்ளது. மேலும் நரம்புகளை பலப்படுத்தி மூளையின் செயல்பாடுகள் வேகம் பெற உதவுகிறது. தேனை அனைவரும் தினந்தோரும் சிறிதளவு சாப்பிட்டு வருவதால் மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகத்திறனும் அதிகரிக்கும்.

இருமல் ஜுரம், சளி போன்ற பாதிப்புகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் போது நெஞ்சில் சளி சேர்ந்து கடுமையான இருமல் ஏற்படுகிறது. இந்நேரங்களில் ஒரு டீஸ்பூன் தேன் அருந்துவதால் கடுமையான இருமல் குறையும். தொண்டைகட்டு மாற்று தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

Advertisements

Leave a Reply