சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்தியில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் அசோக் நகர், கே.கே. நகர், கிண்டி, அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், மத்திய கைலாஷ், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் லேசான அளவில் மழை பெய்தது.
Advertisements