Home செய்திகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

147
0

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது.

டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply