Home செய்திகள் கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு – ‘தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு’

கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு – ‘தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு’

241
0

கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனைக்கு, அக்டோபர் 16-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

“தூக்குத் தண்டனை பெற்ற மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளி மனோகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரேவதி ராகவன், மனோகரனுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை செப்டம்பர் 20-ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும், வழக்கில் வாதாடுவதற்கு மூத்த வழக்குரைஞர் வர முடியாததாலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் மனோகரன் சிறையில் இருந்துள்ளார். அவரது தரப்பில் ஏழு வழக்குரைஞர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மனோகரன் தரப்பில் உரிய வகையில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தபோது மனோகரனுக்கு உரிய சட்ட உதவி அளிக்கப்படவில்லை. இதனால், அந்த ஆவணங்களை ஆராய வேண்டியுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் தூக்குத் தண்டனை தொடர்புடையாக இருப்பதால், வழக்குரைஞர் வாதிடுவதற்கு கடைசி வாய்ப்பாக அக்டோபர் 16-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விசாரணை நடைபெறும். அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.

Advertisements

Leave a Reply