Home செய்திகள் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

162
0

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து திரும்பிய திருவாரூர், விழுப்புரத்தை சேர்ந்த 2 நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply