Home மற்றவை விவாகரத்து முறையீடு – இணையதளத்தில் மனைவியின் ஆபாச வீடியோ

விவாகரத்து முறையீடு – இணையதளத்தில் மனைவியின் ஆபாச வீடியோ

167
0

கொல்கத்தாவை சேர்ந்த 32 வயதான பெண் டாக்டர் ஒருவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு திருமண இணையதளம் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயரை திருமணம் செய்துகொண்டார்.

மனைவியின் செல்போனை ஒருநாள் எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த ஆபாச வீடியோவில் இருந்தது அவரது மனைவி. இதுபற்றி மனைவியிடம் கேட்டதற்கு, ‘நான் காதலித்தவர் இவர் தான். காதலித்த நேரத்தில் தனிமையில் இருந்தபோது இந்த வீடியோவை எடுத்தோம். வருங்காலத்தில் வழக்குகளை சந்தித்தால் தேவைப்படும் என வீடியோவை வைத்திருந்தேன்’ என தெரிவித்தார். இதை நம்பிய கணவரும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்.

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது, அதில் தனது மனைவி மற்றொரு ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்

இதன்பிறகு கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியேறிய கணவர் தனியாக வசிக்க தொடங்கினார். ஆனால் பெண் டாக்டரோ, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குடும்பநல ஆலோசனை மையத்தை நாடினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மையத்தின் மூத்த ஆலோசகர் பி.எஸ்.சரஸ்வதி கூறுகையில், “என்ஜினீயரோ, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறார். பெண் டாக்டரோ பழைய சம்பவங்களை மறந்து, திருமண வாழ்க்கையை தொடரவேண்டும் என்கிறார். நாங்கள் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்” என்றார்.

Advertisements

Leave a Reply