Home விளையாட்டு டென்னிஸ் உலக டென்னிஸ் தரவரிசை – ஜோகோவிச் முதலிடம்

உலக டென்னிஸ் தரவரிசை – ஜோகோவிச் முதலிடம்

118
0

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

Advertisements

Leave a Reply