Home செய்திகள் 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு

1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு

161
0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி தொடங்கிவைத்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்ததால் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவடைந்த நிலையில் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான 4 நாட்கள் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் விடுபட்டோருக்கு 13-ந் தேதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

Advertisements

Leave a Reply