Home பயணம் தனுஷ்கோடி முனை

தனுஷ்கோடி முனை

201
0

தனுஷ்கோடி தீவின் கடைசி முனைதான் இந்த தனுஷ்கோடி முனை ஆகும். புகைப்படங்கள் எடுக்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் இது. 1964’ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்திருக்கிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது.

சீதையை கடத்திக்கொண்டு போய் ராவணன் இலங்கையில் சிறைவைத்திடவே அவரை மீட்க வானர சேனையுடன் ராமன் இலங்கையை அடைய தனுஷ்கோடியில் இருந்து கற்களால் கடலின் மேல் பாலம் அமைத்ததாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டதை பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும் இலங்கைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஒரு நிலத்தொடர்பு இருந்ததற்கான அடையாளங்களை செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் நாம் காண முடியும். அதே போல இங்கிருக்கும் ஒருவகை கற்கள் அதிக எடையை தாங்க கூடியதாகவும் அதேசமயம் நீரில் மிதக்கும் தன்மையுடனும் இருக்கின்றன.

1964இல் அதிகம் புயல் உருவாகாத தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உருவாகி மணிக்கு 250-350 கி.மீ வேகத்தில் டிசம்பர் மாதம் 22-23 தேதிகளில் தடுஷ்கொடியை கடந்த போது புயலின் கரங்களில் சிக்கிய எதுவுமே மிஞ்சவில்லை. அப்போது மெட்ராஸ் எக்மோரில் இருந்து பாம்பன் நோக்கி வந்து கொண்டிருந்த 115 பயணிகள் பயணித்த ரயில் பெரும் அலையால் மூழ்கடிக்கப்பட்டு ரயிலில் இருந்த அதனை உயிர்களையும் பலி வாங்கியது.

அந்த புயலில் மட்டும் ராமேஸ்வரம் தீவில் 1600 பேர் பலியாயினர். அந்த புயலுக்கு பின் தமிழக அரசால் கைவிடப்பட்ட நகரமாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இப்போது சில மீனவ குடுன்ம்பங்களை தவிர யாரும் அங்கே வசிப்பதில்லை

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடியையும் பார்க்க வருவதால் ஓரளவு நல்ல சுற்றுலாவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருகின்றன

கடந்த 20 ஆண்டுகளாகவே படிப்படியாக வளர்ந்துவிட்ட தனுஷ்கோடி தற்போது தமிழ்நாட்டின் மிகமுக்கிய சுற்றுலாத் தளமாகவிளங்குகிறது. பொழுது போக்கிற்காகவும், இன்பமான பயணத்திற்காகவும் இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடியை மெருகேற்றி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply