Home செய்திகள் காஷ்மீர் மத்தியஸ்தம் – அதிபர் டிரம்ப்

காஷ்மீர் மத்தியஸ்தம் – அதிபர் டிரம்ப்

177
0

சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார். பிரதமர் மோடி கூட என்னிடம் உதவி கேட்டார் என கூறினார். ஆனால் இதனை இந்திய அரசு  திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முயன்றது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.,வில் முறையிட்டது. சீனாவை தவிர எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த ஜி7 மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். டிரம்பிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Advertisements

Leave a Reply