Home செய்திகள் அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

153
0

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், துனை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 7 ஆம் தேதி ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.

அமெரிக்காவில் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார்.

Advertisements

Leave a Reply