Home செய்திகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்

192
0

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தற்போது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கவும், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள 22-ந் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த மாதம் 4, 5, 11 மற்றும் 12-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம்கள் நிறைவு பெற்றுவிட்டதால் இந்த கோரிக்கைகளுக்கு என்.வி.எஸ்.பி. இணையதளம், செல்போன் செயலிமூலம் பலர் விண்ணப்பித்தனர். தாலுகா அலுவலகம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் நேரடியாகவும் விண்ணப்பித்தனர்.

இதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. அதன்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்து 618 பேரும், சென்னையில் 55 ஆயிரத்து 475 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், இடமாற்றம் தொடர்பான விண்ணப்பங்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து அடுத்த மாதம் பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Advertisements

Leave a Reply