Home செய்திகள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17ம் தேதி துவங்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17ம் தேதி துவங்கும்

162
0

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், 14ம் தேதி பிற்பகல் 01.30 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இன்று (14ம் தேதி) முதல் 18ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை:
ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று (14ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு

மாநிலத்தின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு.

Advertisements

Leave a Reply