Home மற்றவை ட்ரெண்டாகும் தானிய சேலஞ்ச்

ட்ரெண்டாகும் தானிய சேலஞ்ச்

153
0

சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு, ஐஸ் சேலஞ்ச் , மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச் போன்றவைகள் வைரலாகின. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

அந்த வகையில், தற்போது ‘தானிய சேலஞ்ச்’ என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வருடத்தின் முதல் சவாலாக டிக் டாக் செயலியில் வைரலாகி வருகின்றது தானிய சேலஞ்ச் (cerealchallenge). காலை உணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge. பாலை அதிகம் வாயில் ஊற்றிவிட்டு சிரிக்கும் போது கான்பிளக்ஸை வாயில் போட்டு இந்த சவாலை எதிர்கொள்கின்றனர் சிலர்.

Advertisements

Leave a Reply