Home செய்திகள் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் – மோடி வேண்டுகோள்

3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் – மோடி வேண்டுகோள்

129
0

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல், அந்த நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார்.

நம் நாட்டு இளைஞர்கள் நமது அமைப்புமுறையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன்.

நமது இளைஞர்கள், அராஜகத்தையும், ஒழுங்கீனத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் வெறுக்கிறார்கள். சாதியம், குடும்பத்துக்கு சலுகை காட்டுதல் ஆகியவையும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

விமான நிலையங்களிலோ, சினிமா தியேட்டர்களிலோ யாராவது வரிசையை தாண்டி முன்னே சென்றால், அதை தட்டிக்கேட்பது இளைஞர்கள்தான். அத்துடன், அதை வீடியோ எடுத்து உடனே பரவச் செய்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரியில் உள்ள கற்பாறைக்கு இளைஞர்கள் செல்ல வேண்டும். அதன்மூலம், ஏழைகளுக்கு பாடுபடும் உணர்வைப் பெற வேண்டும்.

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்குமாறு எனது சுதந்திர தின உரையில் வேண்டுகோள் விடுத்தேன். அதை மீண்டும் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும். 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

புதிய புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது புதிய உறுதியையும், சக்தியையும், உற்சாகத்தையும் அளிக்கட்டும். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. நாட்டு மக்களை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply