Home மற்றவை கறிவேப்பிலை – இனி ஒதுக்காதீர்கள்

கறிவேப்பிலை – இனி ஒதுக்காதீர்கள்

151
0

இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது
2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது
3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு
4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது
6) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது
7) காயங்களுக்கு மருந்து : காயம், வீக்கம், பூச்சிக் கடி போன்றவற்றிற்கு கறிவேப்பிலைக்கு நிகர் எதுவுமில்லை. இதை அரைத்து தடவி வந்தால் விரைவில் காயங்கள் குணமாகும்.
8) கல்லீரலைப் பாதுகாக்கிறது
9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
10) முடியை வலுவாக்குகிறது
11) நீரிழிவு நோயாளிகளின் நண்பன் : இரத்தத்தில் சுரக்கும் குளுகோஸ் அளவை சமன் செய்வதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றது. இதில் உள்ள ஸிங்க், காப்பர், இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும்.
12) செரிமான மண்டலத்திற்கு நல்லது
13) கிருமிகளை அழிக்கும் : வயிற்றில் தொற்றுக் கிருமிகள், கிருமிகள் உருவாக்கம் இருந்தால் அவற்றை அடியோடு அழிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.

Advertisements

Leave a Reply