Home சினிமா திருமணம் செய்து கொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா: ரசிகர்கள் வாழ்த்து!

திருமணம் செய்து கொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா: ரசிகர்கள் வாழ்த்து!

213
0

சன் டிவி செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழந்தவர் அனிதா. அவரது அழகு மற்றும் தமிழ் உச்சரிப்புக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இளைஞர்களிடையே அவர் மிகப்பிரபலமாக மாறினார். இவரது அழகை காணவே செய்திகளை பார்க்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடியது.

இவரது பிரபலத்திற்கு பிறகு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது, ஆனால் சினிமா வாய்ப்புகளை மறுத்தவர் செய்தி வாசிப்பாளராகவே தொடர்ந்தார். பல வற்புறுத்தல்களுக்கு பிறகு சினிமாவிலும் செய்தி வாசிப்பாளராகவும் சிறு வேடங்களில் சில படங்களில் தோன்றினார். இந்த நிலையில் திடீரென அவர் திருமணம் செய்து கொண்டது பலரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும், ஆழ்த்தியுள்ளது. திருமண புகைபடங்களை இணையத்தில் பல இளைஞர்கள் அதிர்ச்சி கலந்த சோகத்துடன் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply