Home சினிமா பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு “தை மகள் பிறந்தாள்”

பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு “தை மகள் பிறந்தாள்”

40
0

தமிழ் சினிமாவின் திரை பிரபலங்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிக்கும்போது சினேகா – பிரசன்னா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு விஹான் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2-வது முறையாக கர்ப்பமானார் சினேகா.

தற்போது, தங்களுக்கு மகள் பிறந்திருப்பதாக பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். ‘தை மகள் பிறந்தாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply