இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் வயதான கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். வயதான ரோல் இந்தியன் படத்தில் நடிகை சுகன்யா இந்த ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் வயதான கேரக்டருக்கு தேர்வாகியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
தற்போதுதான் பிரியா பவானி ஷங்கரின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அவர் வயதான கேரக்டரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயதான கேரக்டரில் நடிப்பது பெரிய ரிஸ்க், ஒரு வேளை இதுவே டிராபேக்காக அமைந்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் ஷங்கர் மற்றும் கமல் சாருக்காக இவ்வாறு நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.