நடிகர் விஜய் Bigil வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ குறித்து ஹேஷ்டேக் வெளியிட வேண்டும் என சொன்னதால் இன்று விஜய் ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராகவுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய், சமீபத்தில் பேனர் விழுந்து சுபஸ்ரீ சம்பவம் குறித்துப் பேசியபோது அவர் கூறியதாவது : ” சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூகவலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்” என பேசினார்.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர்களிடம் பிகில் பட அப்டேட் கேட்டே அதை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கியவர்கள். இந்த தற்போது விஜயே சொல்லிவிட்டார் விடுவார்களா என்ன?
கேரளா ஓணம் லாட்டரியில் விழுந்த அதிஷ்டம்…! ரூ 12 கோடி ஜாக்பாட்
தற்போது விஜய் ரசிகர்கள் எல்லாம் #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு சுபஸ்ரீ விவகாரத்தை தற்போது தேசிய அளவில் டிரெண்ட் செய்துவிட்டனர். இதனால் தற்போது சமூகவலைத்தளம் முழுக்க சுபஸ்ரீ குறித்து விஜய் பேசிய விவகாரம் தான் அதிகமாகப் பேசப்பட்டுவருகிறது.