Home செய்திகள் தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகை: ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை

தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகை: ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை

179
0

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சலுகை விலையில் ஜியோ போனை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ‘தீபாவளி 2019’ என்ற புதிய சலுகை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.1,500 மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் ரூ.800 சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய போன்களை ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது’ என கூறப்பட்டுள்ளது.

‘தீபாவளி 2019’ சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும், முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்களும் இலவசமாக கிடைக்கும்.

இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2 ஆயிரம் எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதியும் உள்ளது.

Advertisements

Leave a Reply