Home செய்திகள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது!

135
0

வங்கி மற்றும் மொபைல் எண் வாங்க ஆதார் எண் தேவையில்லை என்ற கூறிய உச்ச நீதிமன்றம், பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏற்கனவே இந்த இணைப்புக்கு கடைசி காலகெடுவாக மார்ச் 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டது. வருமானவரி தாக்கல்செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது. 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தால் போதும்.

இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக இணைக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் அட்டையின் தேவை அத்தியாவசமாகி உள்ளது.

எந்த ஒரு அடையாளச்சான்றிற்கும் ஆதார் இன்று முக்கியமாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு ஏற்கனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொண்டது. அதற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடுவினை அரசு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கடைசி கெடுவினை வைத்துள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பேன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.னவே, வரும் அக்டோபர் 1ம் தேதி ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகி விடும். அதன்பின் புதிதாக விண்ணப்பித்தே பான் எண் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply