Home செய்திகள் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

156
0

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை நீண்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போன்று ஜெயங்கொண்டம், பூலாம்பாடியில் தலா 6 சென்டி மீட்டரும், அதிராம்பட்டினம், அரியலூர், திருவையாறு, திருமானூர், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் தலா 5 செ.மீ மழையும் பெய்து உளளது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் பதிவாகக் கூடும்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன என கூறினார்.

Advertisements

Leave a Reply