Home மற்றவை விஜய்சேதுபதிஸம்

விஜய்சேதுபதிஸம்

168
0

2010ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி இந்த 9 ஆண்டுகளில் பல ஹிட் படங்களையும், பல சிறந்த நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்திய விஜய்சேதுபதி இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக சிறந்த நடிகர்.

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி சட்டென்று முன்னணி நடிகராக மாறவில்லை. கடந்த 1998ம் ஆண்டு வெளியான கோகுலத்தில் சீதை படத்தில் கூட்டத்தில் ஒருத்தனாக ஆடியன்ஸாக நடித்திருந்தார். அடுத்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா என பல படங்களில் தொடர்ந்து சைடு ரோலில் நடித்து பின்னர் தான் நாயகன் ஆனார்.

சைடு ரோல்களில் கூட்டத்தில் ஒருத்தனாக நடித்து வந்த நடிகர் விஜய்சேதுபதி பல போராட்டங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய்சேதுபதி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் 9YrsOfVijaySethupathism என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். ஹீரோவாக நடித்தாலும், வில்லன், ஹீரோ நண்பன், திருநங்கை என பல பரிமாணங்களில் தொடர்ந்து ஒரு நல்ல நடிகனாகவே தன்னை வெளிக்காட்டி வருகிறார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

ஹீரோ ஆன பிறகும் கூட நடிகர் விஜய்சேதுபதிக்கு வெற்றி – தோல்வி என மாறி மாறி தான் வருகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும், நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

முன்னணி ஹீரோவாக இருக்கும் எந்த ஒரு நடிகரும், மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். சூப்பர் ஸ்டார் வாயால் மகா நடிகன் என்ற பட்டத்தை பெற்ற விஜய்சேதுபதி, மாதவன், ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு மாஸ் வில்லனாக நடித்து ஸ்கோர் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடியில் கலக்கி வந்த விஜய்சேதுபதி தனது தனித்துவமான நடிப்பால், தன்னால் எந்த ரோலிலும் நடிக்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 9 ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு 9YrsOfVijaySethupathism என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply