Home செய்திகள் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு

163
0

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில்(2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply