Home செய்திகள் உலக செய்திகள் கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு

123
0

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் கிரேஸ் என்ற இடம் உள்ளது. இங்குள்ள தொழில்பூங்கா அருகே நின்ற டிரக் ஒன்றை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். இதில், டிரக்கில் 39 மனித உடல்கள் இருந்தது போலீசாரை அதிர்ச்சி அடையச்செய்தது.

டிரக்கை ஒட்டி வந்த அயர்லாந்தைச் சேர்ந்த 25-வயதான ஓட்டுநரை கைது செய்துள்ள பிரிட்டன் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை குற்றமாக அந்நாட்டு போலீசார் விசாரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply