Home செய்திகள் 300 ஆசிரியர்களே தேர்ச்சி : ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

300 ஆசிரியர்களே தேர்ச்சி : ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

250
0

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ? அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.
அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.
ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்நிலையில், ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன.
ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  முதல் தாள் தேர்வை போன்று இந்த தேர்விலும் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  99 சதவீதத்தினர் தோல்வி அடைந்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply