Home செய்திகள் உலக செய்திகள் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்

லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்

141
0

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், லண்டன் பாலம் அருகே மூன்று பேர், கத்தியால் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மேற்கூறிய தாக்குதல் சம்பவம் நினைவு படுத்தியது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக கருதி விசாரித்து வருவதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலையடுத்து, லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Advertisements

Leave a Reply