தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரத்திற்கும் தாமதமாக பெய்யத் துவங்கியது. ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கனமழை தான் எங்கும். செப்டம்பரம் இறுதி வாரம் வரை பெய்த கனமழையால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.
ஆனால் காலம் தவறி பெய்த மழையால் விவசாயப் பொருட்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவின் வெங்காயத்தின் உற்பத்தி இயல்பைக் காட்டிலும் மிகவும் குறைந்துவிட்டது.
சென்னையில் இன்று காலையில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகாலை 04:30 மணிக்கு துவங்கிய கனமழை 06:30 வரை கொட்டித்தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.