Home செய்திகள் ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி

ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி

154
0

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க விரும்புவதாகவும், இதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் செல்லும் போது வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி ஈடுபட்டால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். இதையடுத்து, தனது கட்சி எம்.எல்.ஏவான யூசுப் தாரிகாமியை சந்திக்க சீதாரம் யெச்சூரி ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றார்.

Advertisements

Leave a Reply