Home செய்திகள் வாஜ்பாய் இருந்த பங்களாவில் குடிபெயர்ந்தார் அமித் ஷா!!

வாஜ்பாய் இருந்த பங்களாவில் குடிபெயர்ந்தார் அமித் ஷா!!

478
0

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்த பங்களாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடிபெயர்ந்துள்ளார். வாஜ்பாயின் பங்களா மத்திய டெல்லி, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ளது. முன்னதாக அவர் அக்பர் சாலையில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தார்.
மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு வாஜ்பாயி பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் வாஜ்பாயின் பங்களா, அந்த பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்தது. அங்கு அவர் கடந்த 14 ஆண்டுகளாக வாஜ்பாயி தங்கியிருந்தார். கடந்த ஆண்டு அவர் மறைந்ததை தொடர்ந்து, பங்களா காலியாக உள்ளது.

Advertisements

Leave a Reply