Home சினிமா வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபு

வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபு

292
0

வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபுவை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்தனர். நயன்தாராவே சிபாரிசு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். கடந்த வருடம் மட்டும் யோகிபாபு நடித்து 19 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

கூர்கா, ஜாம்பி படங்களில் கதாநாயகனாகவும் வந்தார். பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார்.

தற்போது இம்சை அரசன்-2 பிரச்சினை காரணமாக அவரை நீக்கி விட்டு யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து படவேலைகளை தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது குமுளி பகுதியில் நடந்து வருகிறது. யோகிபாபு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

இம்சை அரசன் 2-ம் பாகம் படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு மாறி இருப்பதாக பட உலகில் பேசுகின்றனர். இந்த நிலையில் வடிவேலு பிரச்சினையில் தற்போது சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply