Home சினிமா `ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு!’

`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு!’

457
0

`நீ யாருன்னு இந்த சமூகத்துக்கு தெரியும். நீ யாருன்னு எனக்கும் தெரியும். சமூகம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது.’

துப்பறிவாளன் 2’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் - விஷால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.ஒரு இயக்குநர் திரைப்படத்தைவிட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்ன?’ என விஷால் வெளியிட்ட அறிக்கை திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மிஷ்கின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அதில் அவர் அடுக்கியிருந்தார்.

இந்தநிலையில், இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் மிஷ்கின், “ஒரு வருடமா ஒரு கதையை யோசித்து எழுதினேன். சகோதரன் என்று அவருக்காகத் துப்பறிவாளன் -2 கதையை எழுதினேன். இந்த ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அந்த சகோதரனை மோசமாகப் பேசும்போதும் பார்க்கும்போதும் என் தோளில் போட்டுக்கொண்டு, அவனை என் சகோதரனாகப் பாவித்தேன். என்னுடன் பிறந்த சகோதரன் மீது கூட நான் அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அந்த அளவுக்கு அன்பு செலுத்தி அவனுக்காக 2-வது படம் எழுதினேன். 2018-ல் துப்பறிவாளன் முதல் பாகம் ரிலீஸானது. அந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கின்போது பெரிய ஸ்ட்ரைக் நடந்தது. அப்போது நான் மூன்றே மூன்று அசிஸ்டென்ட் டைரக்டர்களை வைத்து கிட்டத்தட்ட 6 – 7 நாள் நான் மட்டும் தனியா ஷூட் பண்ணினேன். கடைசியில பட்ஜெட் இல்லாததால் 4 நாள்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை 6 மணி நேரத்தில் எடுத்துக்கொடுத்து அந்தப் படம் ரிலீஸானது. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது எல்லோருக்கும் தெரியும்.

அதற்கு முன்பு விஷால் நடித்த மூன்று படங்கள் ஃப்ளாப். துப்பறிவாளன் அவருக்கு சக்ஸஸ் கொடுத்தது. அந்தப் படத்துக்கு எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒருவருடத்துக்குப் பிறகு, மீண்டும் வந்து கதை எழுதச் சொன்னார். `உனக்கு நிறைய கடன் இருக்கு. ஒரு நல்ல கதை எழுதி தமிழ்ல மட்டும் இல்லாமல், மற்ற மொழிகளிலும் எடுக்கும் விதமாக கோஹினூர் வைரம் வைத்து கதை எழுதுகிறேன். ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா மக்களுக்கு கோஹினூர் வைரம் குறித்து தெரியும் அப்போதுதான், நீ அதைப் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யலாம்’ என்றேன்.

கதையும் எழுதி முடித்துவிட்டேன். பாப்பி என்கிற தயாரிப்பாளர் வந்து கதை கேட்டு அவருக்குப் பிடித்துப்போக, நாங்களே தயாரிக்கிறோம்' என முன்வந்தனர். எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாகத் தந்தனர். அதன்பின் விஷாலுக்கு கதை சொன்னேன். கதை கேட்டவுடன் விஷால் கண்ணீருடன் என்னைக் கட்டியணைந்தார்.இந்தக் கதை எனக்குப் போதும்; இதை வைத்து எல்லா கடனையும் அடைச்சுடுவேன்’னு சொன்னார்.

மூன்று நாள் கழித்து வந்து, அந்தத் தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன்' என்றான். அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்குத் தலைவலி.இந்தப் படம் எடுக்க 20 கோடி ரூபாய் செலவாகும். இன்னும் 2 மாசத்துல ஆக்‌ஷன் படம் வெளியாகும். படம் ஓடலைன்னா, உனக்கு மேலும் கடன் சுமையாகும்’ எனக் கூறினேன். இல்ல நான்தான் பண்ணுவேன்' என்று அடம்பிடித்தார்.சரி, இதைத் துப்பறிவாளன் பாகம் 3 ஆக எடுத்துக்கொள்வோம். துப்பறிவாளன் 2 படம், 10 கோடி ரூபாய் பட்ஜெட்ல சென்னைல நடக்குற மாதிரி பண்ணி தர்றேன்’னு சொன்னேன். `இல்ல, இந்தப் படம்தான் பண்ணணும்’னு சொன்னார். இதுவரை நான் இங்கிலாந்து சென்றதில்லை. அதனால, இங்கிலாந்து போய் அங்க லொக்கேஷன் பார்த்துதான் கதை எழுதணும்னு சொன்னேன். ஸ்கிரிப்ட் ரைட்டிங்காக நான் கேட்ட பணம் 7.5 லட்சம். நான் செலவு செய்தது 7 லட்சம்தான்.

திரைக்கதை எழுத மட்டும் நான், 35 லட்சம் செலவு செய்ததாக விஷால் கூறியுள்ளார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருக்கிறேன். ஒரு தயாரிப்பாளராக கதை எழுத மட்டும் 35 லட்சம் செலவு பண்ணுணா, அவன் ஒரு டைரக்டரே இல்லன்னு சொல்லுவேன். நான் செலவு பண்ணுனது என் கையில இருக்கு. 13 கோடி செலவு செய்திருக்கிறேன் என்கிறார் விஷால். நான் 32 நாள்கள் ஷூட் செய்துள்ளேன். நான் ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்கிறேன். அப்படி பார்த்தால் 32 நாள்கள் 15 லட்சம் செலவு செய்திருந்தால் 4.8 கோடி ரூபாய்தான். இந்த 13 கோடி ரூபாய் என சொன்னதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

நான் ஒவ்வோர் இடத்துலயும் அவமதிக்கப்பட்டேன். அவர் பேசுனதுக்கு என்கிட்ட ரெக்கார்டு இருக்கு. நான் இவருக்கு என்ன துரோகம் செய்தேன். எந்தத் தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது' என்கிறார். இவர் ஒரு தயாரிப்பாளரின் மகன் நான் ஒரு ஏழை டெய்லர் வீட்டில் மகனாகப் பிறந்தவன்தான். என் படங்கள் சொல்லும் நான் யாருன்னு. இந்தப் படத்தை 32 நாள்கள் எடுத்துள்ளேன். இந்தப் படத்தோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏன் நேற்று வந்தது? யாராவது கேட்டீங்களா. கடந்த 10 நாளா என் ஆபீஸ் முன்னாடி வந்து நின்னு ஸ்கிரிப்ட் கொடுன்'னு என் உயிர எடுத்தாங்க. ஸ்கிரிப்டோடு டைரக்டர் கவுன்சில் சென்றிருந்தால், இன்னைக்கு போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா. உன்னால ஒரு படம் எடுக்க முடியுமா?
<p style="text-align: left;">நீ யாருன்னு இந்தச் சமூகத்துக்குத் தெரியும். நீ யாருன்னு தெரியும். சமூகம் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில்,
தாணு எல்லாத்தையும் தப்பா பேசச் சொன்னார். என் அண்ணனா இருந்தா வந்து நாமினேஷன் பண்ணு’ன்னு சொன்னே. நான் வந்தேன் உனக்காக. நான் எப்படி வேலை செஞ்சேன்னு, நான் வேலைபார்த்த தயாரிப்பாளர்கள்கிட்ட கேளுங்க. என் தம்பியை அடிச்சார். சம்பளம் கேட்டா துப்பறிவாளன் ஓடலைன்னு சொன்னான். அப்புறம் ஏன் மறுபடியும் பண்ணச் சொல்றேன்னு கேட்டா. இந்தக் கதை புடிச்சுருக்குன்னு சொன்னார். சரி சைக்கோ ஓடட்டும் அப்புறம் வர்றேன்னு வந்துட்டேன். சைக்கோக்கு அப்புறம் 5 கோடி சம்பளம் கேட்டேன். `சைக்கோ ஓடலை, நீங்கதான் ஓடுனதுன்னு சொல்றீங்க’ன்னார். நான் திரும்பி வந்துட்டேன். அவர் கெட்ட வார்த்தையில பேசுனார். 3 வருஷம் தம்பின்னு கூப்பிட்டதால நான் ஏதும் கேட்கல. தமிழன் காப்பாத்துறதுக்கு நீ யார்? இங்கே ஆளே இல்லையா என்ன? இது ஒரு தமிழனின் கோபம்” எனக் காரசாரமாகப் பேசியுள்ளார்.
 

-Credits vikatan

 

Advertisements

Leave a Reply