Home செய்திகள் ரயில்வே உத்தரவு – பிளாஸ்டிக் தடை

ரயில்வே உத்தரவு – பிளாஸ்டிக் தடை

374
0

ஆக.,15 சுதந்திர தினம் அன்று, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக ஒவ்வொரு குடிமகனும், நகராட்சியும் , கிராம பஞ்சாயத்தும் ஒன்றிணைய வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, பார்லிமென்ட் வளாகத்திலும், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்., 2 முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்., 2 முதல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply