பெங்களூரு,துங்கநகரில் உள்ள முக்கிய சாலை குண்டும் குழியுமாக இருப்பதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டு, நிலவின் மேற்பரப்பு போன்று சாலையில் 3டி ஓவியர் படால் நஞ்சுண்டசாமி என்ற ஓவியர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.இந்த வீடியோ வைரலானது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனமும் எழுந்தது.
இது குறித்து அறிந்த நகர கட்டுமான நிர்வாகத்தின் ஆணையர் அனில் குமார், சாலையை விரைவாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து துங்கநகரில் சாலை மேம்பாட்டுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி என்று ஓவியர் நஞ்சுண்டசாமி தெரிவித்துள்ளார்.
Advertisements