Home செய்திகள் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

201
0

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர்.

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி வருகையால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

மேலும் மத்திய கைலாஷ்-சோழிங்கநல்லூர் வரை உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாமல்லபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply