Home செய்திகள் மகாராஷ்டிராவில் 45 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த எம்.பி!

மகாராஷ்டிராவில் 45 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்தப்பட்ட அடுத்த எம்.பி!

48
0

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த நிலையில், தற்போது இது 45 ஆக அதிகரித்துள்ளது. புனேவில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பா.ஜ.க எம்.பி சுரேஷ் பாபு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியா சென்றுவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஏற்கெனவே மத்திய இணை அமைச்சர் முரளிதரன் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply