Home செய்திகள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ! வாகன ஓட்டிகள் கவலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு ! வாகன ஓட்டிகள் கவலை

412
0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.06 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.91 காசுகள் ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் ரூ.2.21, டீசல் ரூ.1.76 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply