Home சினிமா ‘பிகில்’ திரைப்படம் ரிலீஸ் ?

‘பிகில்’ திரைப்படம் ரிலீஸ் ?

397
0

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது.இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

தீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களை தள்ளி வைத்துள்ளதால் பிகில் மட்டுமே தீபாவளிக்கு தனித்து திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 24-ந் தேதி வியாழக்கிழமையன்று படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply