Home ஜோதிடம் பரிகாரங்கள் – 12 ராசி

பரிகாரங்கள் – 12 ராசி

485
0

மேஷம்: இந்த வாரம் முழுவதும் ஈடுபடும் அனைத்திலும் பயன்களை பெற தினந்தோறும் புவனேஸ்வரி அம்மனுக்கு தீபம் ஏற்றி, புவனேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

ரிஷபம்: இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதற்கு தினமும் மகாவிஷ்ணு மற்றும் தாயாரின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

மிதுனம்: இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து காரியங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை வணங்குவதால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்: இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான நன்மைகள் ஏற்படுவதற்கு தினமும் காலையில் சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்து வருவது அனைத்திலும் சிறப்பான நன்மைகளை தரும்.

சிம்மம்: இந்த வாரத்தில் ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய பகவானை வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறமுடியும்.

கன்னி: இந்த வாரம் முழுவதும் தாங்கள் ஈடுபடுகின்ற காரியங்களில் வெற்றி பெறவும், அனைத்திலும் சிறப்பான லாபங்களை பெறுவதற்கு புதன்கிழமை அன்று புதன் பகவானையும், ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும் வழிபட வேண்டும்.

துலாம்: இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினமும் சிவன் கோயிலில் நந்தி பகவானுக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபடுவது நற்பலன்களை ஏற்படுத்தும்.

விருச்சிகம்: இந்த வார காலம் முழுவதும் பாதகங்கள் ஏதும் ஏற்படாமல், அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவும், லாபங்கள் அதிகரிக்கவும் காலையில் சிவபெருமானை தரிசிப்பதும், நாகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் சிறப்பு.

தனுசு: இந்த வார காலத்தில் தங்களுக்கு தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கும், அனைத்திலும் மிகுதியான லாபங்களை பெறுவதற்கு வியாழக்கிழமையில் மட்டும் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட வேண்டும்.

மகரம்: இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியத்தில் வெற்றியையும், அனைத்து விடயங்களிலும் லாபங்களை பெறுவதற்கும் தினமும் பராசக்தியையும், தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவரையும் வழிபட வேண்டும்.

கும்பம்: இந்த வார காலம் முழுவதும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளையும், லாபங்களையும் அதிகம் பெறுவதற்கு தினமும் குலதெய்வத்தை வழிபடுவதோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் வழிபட வேண்டும்.

மீனம்: இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து விடயங்களிலும் சிறப்பான நன்மைகளைப் பெறுவதற்கு, தினமும் காலையில் சூரிய பகவான் வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

Advertisements

Leave a Reply