Home செய்திகள் துபாயிலிருந்து திரும்பிய தென்காசி இளைஞருக்கு கொரோனா அறிகுறி? -நெல்லை சிறப்பு வார்டில் சிகிச்சை

துபாயிலிருந்து திரும்பிய தென்காசி இளைஞருக்கு கொரோனா அறிகுறி? -நெல்லை சிறப்பு வார்டில் சிகிச்சை

78
0

துபாயிலிருந்து திரும்பிய பின்னர் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. அதனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவரைக் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள திருகூடபுரத்தைச் சேர்ந்தவர், செந்தூர் பாண்டியன். விவசாயியான அவரது மகன் சதீஷ்குமார் என்பவர் துபாயில் பணியாற்றி வருகிறார். வளைகுடா நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக அசாதாரணமான சூழல் நிலவுவதால் சதீஷ்குமார் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது துபாயில் பணியாற்றி விட்டு சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருப்பது தெரியவந்தது. அதனால் அவருக்குக் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் அவரை கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதித்துக் கண்காணித்து வருகிறார்கள். அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Credits Vikatan

Advertisements

Leave a Reply