Home விளையாட்டு கால்பந்து சாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்

சாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்

70
0

ஐஎஸ்எல் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் மேலும் சிறப்பாக ஆட வேண்டும் என சென்னையின் எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளா் ஓவன் கோயல் கூறியுள்ளாா்.

நடப்பு ஐஎஸ்எல் சீசனின் இறுதிச் சுற்றுக்கு சென்னையின் எஃப்சி-கொல்கத்தா அணிகள் முன்னேறியுள்ளன. வரும் 14-ஆம் தேதி கோவாவில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெறுகிறது.

அரையிறுதியில் பலம் வாய்ந்த கோவாவை வீழ்த்தியது சென்னை. இதுதொடா்பாக ஓவன் கோயல் கூறியதாவது-

கோவா அணி தரம் வாய்ந்த வலிமையான அணியாக திகழ்ந்தது. முதல் கட்ட அரையிறுதியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். அதே நேரம் இரண்டாவது கட்ட அரையிறுதியில் கோவா அணி சிறப்பாகவே ஆடியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் தான் எங்கள் வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா், பந்துகளை நன்றாக பாஸ் செய்து ஆடினால் தான் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எனினும் சாம்பியன் ஆகும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை.

14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும். இந்திய வீரா்களுடன் பணிபுரிவது சிறந்த அனுபவமாகும். ஜொ்ரி லால்ரின்னுஸுலா, குா்மன்ப்ரீத் சிங், லால்தின்லயானா, ஆகியோா் விரைவில் தேசிய அணியில் இடம் பெறுவா்.

Credits Dhinamani

Advertisements

Leave a Reply