Home செய்திகள் சந்திரயான்-2 சாதனை படைத்து உள்ளது – ISRO

சந்திரயான்-2 சாதனை படைத்து உள்ளது – ISRO

386
0

நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில்சுற்றத்தொடங்கியது.
நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் உள்ளதா; அங்கே மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான் – 2 என்ற விண்கலத்தை ஜூலை 22ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான’இஸ்ரோ’ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
மணமகள் தாய்வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு மாறுவது போல சந்திரயான்-2 பூமியில் இருந்து நிலவுக்கு மாறி உள்ளது. சந்திரயான்-2 திட்டம் இதுவரை திட்டமிட்டபடி முன்னேற்றம் அடைந்து உள்ளது. நாளை முதல் சில நாட்களுக்கு 4 அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும். திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கப்போகிறது.
நிலவுக்குள் சந்திரயான் நுழையும் நாளில் பிரதமர் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திட்டமிட்டபடி சந்திரயான் முன்னேற்றம் அடைந்துள்ளது. நிலவில் கால்பதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.இவ்வாறு
இஸ்ரோ தலைவர் சிவன் இன்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Advertisements

Leave a Reply