Home செய்திகள் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

200
0

உலக அளவில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. கடந்த 27-ம் தேதி, தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஏராளமானோர் மூச்சு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து உள்ள காரணத்தினால் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply