Home செய்திகள் `காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்

`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்

49
0

வைரஸானது மேற்பரப்புகளில் அதிக நேரங்கள் இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அவை காற்று, உலோகங்கள் போன்றவற்றில் சர்வைவ் செய்யும் கால அளவை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ், உலக அளவில் பரவி பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 1,30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 5000 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நாடான சீனாவில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் வைரஸ் குறித்த அச்சம் அதிகமாகவே உள்ளது. இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனமும் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் கொரோனாவைத் தடுப்பது குறித்து பல நாடுகளிலுள்ள மருத்துவர்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் சர்வைவல் குறித்து கண்டறிந்துள்ளனர். அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இந்த ஆய்வில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தகவலின்படி வைரஸானது, `காற்றில் மூன்று மணிநேரம், காப்பரில் நான்கு மணி நேரம், கார்ட்போர்டில் ஒரு நாள் முழுவதும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருள்களில் 72 மணி நேரம்’ வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இங்கிலாந்தைச் சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர், அசுத்தமான மேற்பரப்புகளில் வைரஸ் இருக்கலாம். மேற்பரப்புகளைத் தொட்டபின்னர் முகத்தைத் தொடுவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்" என எச்சரிக்கை விடுத்தார். அவரைத் தொடர்ந்து, பேராசிரியர் கிறிஸ் விட்டி என்பவர்,கொரோனா வைரஸ் கடினமான உலோகங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கதவுகளின் கைப்பிடிகள் போன்றவற்றில் மூன்று நாள்கள் வரை இருக்க முடியும்” என்று கூறியிருந்தார். தவிர, மேலும், சில ஆராய்ச்சியாளர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவுவதைவிட கைகளின் வழியாக வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது என்று எச்சரித்திருந்தனர்.

வைரஸானது மேற்பரப்புகளில் அதிக நேரங்கள் இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும் அவை காற்று, உலோகங்கள் போன்றவற்றில் சர்வைவ் செய்யும் கால அளவை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். இந்த அறிக்கையை வெளியிடும் முன் `ஆராய்ச்சியில் கண்டறிந்தது குறித்து மறுசீராய்வு செய்யப்படவில்லை’ என்றும் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்தத் தகவலைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2003-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸைப்போல கொரோனா வைரஸ் சோதனைகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி முடிவுகளை வல்லுநர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். “மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன” என்பன போன்ற கருத்துகளைப் பலரும் தெரிவித்து வருகின்றனர். வைரஸை அழிக்க சிறந்த வழியை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்காத நபர்களிடமிருந்தும் அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என மேலும் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள செய்தி அனைத்துத் தரப்பினரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

-Credits vikatan

Advertisements

Leave a Reply